செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அமைச்சர் சிதம்பரம் குடும்பம் நிலஅபகரிப்பு கண்டுபிடிக்கப்பட்டது

Viruvirupu
நளினி சிதம்பரம்
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் அரசு நிலத்தை அபகரித்ததாக செய்யப்பட்ட புகார், நிஜமாகியுள்ளது. அபகரிப்பு நிலத்தில் அமைச்சர் குடும்பத்தினரால் எழுப்பியிருந்த சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டது.
சென்னை முட்டுக்காடு அருகே கரிக்காட்டுக் குப்பத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் ஆகியோர் மீது தென்னிந்திய மீனவர் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெயபாளையன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் அண்மையில் புகார் தெரிவித்திருந்தனர்.
அபகரிப்பு நிலத்தில் சுற்றுச் சுவரைக் கட்டியுள்ளனர் என்பறும் புகாரில் குறிப்பிடப்பட்டது.
ப. சிதம்பரம் குடும்பத்தினர் சுவர் எழுப்பியிருப்பதால் தங்களால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என்றும், ஆக்கிரமித்த அரசு இடத்தில்தான் தாங்கள் வலைகளை உலர்த்தி வந்ததாகவும் மீனவர்கள் கூறியிருந்தனர். நளினி சிதம்பரத்தின் சார்பில் வழக்கறிஞர் அருள் நடராஜன் இதை மறுத்திருந்தார். மீனவர்களின் புகார் பொய் என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் மீனவர்களின் புகார் குறித்து திருப்போரூர் தாசில்தார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் குடும்பத்தினர் கட்டிய சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு, அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக