புதன், 19 செப்டம்பர், 2012

கதவு திறந்ததால் பள்ளி வேனிலிருந்து விழுந்த எல்கேஜி மாணவன் பலி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
துறையூர் அருகே பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த எல்கேஜி மாணவன் பரிதாபமாக இறந்தான். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையத்தில் விக்னேஷ் வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் இன்று காலை மாணவர்களை ஏற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றது. முதலில் சிக்கத்தம்பூருக்கு சென்ற வேன், அந்த ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் கிஷோர்(5) என்ற எல்கே«ஜி மாணவனை ஏற்றி கிளீனர் சீட்டில் டிரைவர் உட்கார வைத்தார். அப்போது சிறுவன் கிஷோர் கிளீனர் சீட்டுக்கு அருகில் இருந்த கதவில் சாய்ந்தபடி சென்றுள்ளான். சிறிது தூரம் சென்றவுடன் அந்த கதவு திடீரென திறந்து கொண்டது. இதில் சிறுவன் கிஷோர் கீழே விழுந்து படுகாயமடைந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் வேனை நிறுத்தினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கிஷோர் பரிதாபமாக இறந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக