ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இனி உண்ணாவிரதம் இல்லை: ஹசாரே அறிவிப்பு

 ""கோரிக்கைகளை வலியுறுத்தி, இனிமேல், உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. போராட்டங்கள் மட்டுமே நடத்துவேன்,'' என, சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறினார்.
அப்பனே பிள்ளையாரப்பா கிழவனுக்கு இனியாச்சும் நல்ல புத்தி கொடுப்பா
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடந்த விழாவில், பங்கேற்க வந்திருந்த, சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியதாவது:ஊழலை ஒழிப்பதற்காக, ஏராளமான உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி விட்டேன். சமீப காலமாக, உண்ணாவிரத போராட்டங்களை மத்திய அரசு, அலட்சியப்படுத்துகிறது.எனவே, இனிமேல், கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருக்கப் போவது இல்லை; அந்த முடிவை கைவிட்டு விட்டேன். அதேநேரத்தில், ஊழலை ஒழிப்பதற்காக, தொடர்ந்து போராட்டங்களை நடத்துவேன்.
ஊழல் கறைபடியாத நபர்களை, பார்லிமென்ட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே, என் விருப்பம். அதற்காக, தொடர்ந்து பாடுபடுவேன். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்; அது, மகிழ்ச்சி அளிக்கிறது.தற்போதுள்ள இளைஞர்கள், நாட்டின் எதிர்காலம் பற்றி, நம்பிக்கை இன்றி உள்ளனர். இது தவறான போக்கு; இளைஞர்கள் அப்படி நினைக்கக் கூடாது. நாட்டுக்கு, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில், இளைஞர்களின் பங்கு, மிகவும் முக்கியமானது.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக