திங்கள், 10 செப்டம்பர், 2012

கூடங்குளம், தப்பி ஓடும்போது குழந்தை பலி - போலீசார் விரட்டியதில்

இடிந்தகரை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்தில் ஒன்று திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டியடித்ததில் குழந்தை ஒன்று கீழே விழுந்து பலியான பரிபாதம் நிகழ்ந்திருக்கிறது,
கூடங்குளம் சுனாமிகாலனி கடற்கரையில் குவிந்திருந்த பல்லாயிரம் மக்களை கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இதில் கடலுக்குள் குதித்தவர் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. இதனிடையே கூடங்குளம் மக்களுக்காக நடந்த போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் அந்தோணிசாமி, மணப்பாடு கிராமத்தில் பலியானார்.

இந்நிலையில் இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன்பாக ஒன்று திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்துள்ளனர். அங்கிருந்த மேரிமாதா சிலையையும் போலீசார் உடைத்து நொறுக்கியுள்ளனர். போலீசார் பொதுமக்களை விரட்டியடித்த போது குழந்தை ஒன்று கீழே விழுந்து பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக