திங்கள், 24 செப்டம்பர், 2012

ஸ்பெக்ட்ரம்: அட்டர்னி ஜெனரலிடம் விசாரிக்க பாராளுமன்ர முடிவு

"2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த குழு முன்பு அடுத்த சாட்சியாக ஆஜராகுமாறு அட்டர்னி ஜெனரல் ஜி.வாகன்வதியை அழைக்க பி.சி.சாக்கோ முடிவு செய்துள்ளார். அக்டோபர் 3–ந் தேதி ஆஜராக வாகன்வதிக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இதற்கு பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘ஒரு வக்கீல் தனது கட்சிக்காரருக்கு (மத்திய அரசு) அளித்த அல்லது அளிக்கத் தவறிய அறிவுரைக்காக அவரிடம் விளக்கம் கேட்க முடியாது’ என்று அவர்கள் கூறினர். இருப்பினும், அட்டர்னி ஜெனரலை அழைப்பதில் பி.சி.சாக்கோ உறுதியாக இருக்கிறார். அட்டர்னி ஜெனரல், பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராவது இதுவே முதல்முறை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக