திங்கள், 17 செப்டம்பர், 2012

நடிகர் லூஸ்மோகன் காலமானார்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் உடல்நலக்குறைவால் இன்று (16.09.2012) காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ்மோகன். சென்னை தமிழில் பேசி காமெடி செய்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தர். தனது ஒரே மகன் கார்த்திக் வீடு உள்ள ‌மைலாப்பூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மனைவி பச்சையம்மாள் கடந்த 2004-ம் ஆண்டு இறந்தார். காலமான லூஸ் மோகன் இறுதிச்சடங்கு சென்னை மைலாப்பூரில் நடக்கிறது. லூஸ் மோகன் மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 நடிகர் லூஸ் மோகனை பற்றிய முந்தய செய்தியை அறிவதற்கு ,
 http://namathu.blogspot.com/2011/10/blog-post_3755.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக