ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மதுரை ஆதீனத்தின் மீது 500 கோடி மோசடி புகார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper மதுரை ஆதீன மடம் மீட்புக்குழு தலைவர் திருமாறன், போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் அளித்த புகார் மனு: மதுரை ஆதீனமாக உள்ள அருணகிரிநாதர், மடத்தின் நற்பெயரையும், புகழையும் சீர்குலைத்ததுடன், பல்வேறு மோசடி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆதீன மடத்துக்கென மதுரை நகரில் தெற்கு ஆவணி மூல வீதி, நகைக்கடை பஜார், கூடம் சாமியார் சந்து, வெள்ளியங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட 20 இடங்களில் சொத்துகளும், கடைகளும் உள்ளன. கடந்த 32 ஆண்டுகளாக வாடகை உள்பட பல்வேறு வழிகளில் 500 கோடி வரை பணம் கிடைத்துள்ளது. இந்த சொத்தை அனுபவித்து மதுரை ஆதீனம் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் திருமாறன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக