ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

கர்நாடக முதல்வர்: தமிழகத்துக்கு 3 நாள்தான் காவிரி நீர்

தமிழகத்துக்கு 3 நாள்தான் காவிரி நீர் திறக்கப்படும் என்றும் அதற்குள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
காவிரியில் திடீரென நேற்று நள்ளிரவு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறமுடியாது. 3 நாட்களுக்கு மட்டும்தான் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கர்நாடக விவசாயிகள் அமைதிகாக்க வேண்டும். இன்னும் 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக