சனி, 1 செப்டம்பர், 2012

லண்டன் : 350 இந்திய மாணவர்களுக்கு நெருக்கடி

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் மாநகர பல்கலைக்கழகத்தில், இந்தியா உள்பட வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், இந்தியாவை சேர்ந்த 350 மாணவர்கள் உள்பட 2 ஆயிரத்து 600 வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டிய நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
இந்தநிலையில், லண்டன் மாநகர பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான விண்ணப்பங்களை பரிசீலிப் பதற்காக இந்தியாவில் டெல்லி மற்றும் சென்னையில் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, இந்த அலுவலகங்களில் மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்பட இந்தியாவில் செயல்பட்டு வந்த இரு அலுவலகங்களும் தற்போது மூடப்பட்டு விட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக