சனி, 4 ஆகஸ்ட், 2012

Walking சென்றபோது RSS மாஜி தலைவர் கடத்தல்?

மைசூர் :மைசூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அவர் கடத்தப்பட்டாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தலைவராக இருந்தவர் கே.எஸ்.சுதர்சன் (71). மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூரில் உள்ள சகோதரரை பார்க்க வந்திருந்தார். இன்று காலை வாக்கிங் சென்றார். எப்போதும் பாதுகாவலருடன் செல்லும் சுதர்சன் இன்று தனியாக சென்றார். அவருக்கு ஞாபக மறதி நோய் உள்ளது. இந்நிலையில் வாக்கிங் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் கடத்தப்பட்டாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக