வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கான்பூரில் இருந்து வந்து வசூல் வேட்டை செய்த போலிஸ் SP. தீட்ச்சதர்வாள்

 How Ips Officer Abishak Dixit Amassed Wealth கிரைம் மீட்டிங் வைத்து மாதந்தோறும் மாமூல் வசூல் செய்த எஸ்பி அபிஷேக் தீக்ஷித்

 கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி அபிஷேக் தீக்ஷித் மாதம் தோறும் கிரைம் ரிவ்யூ மீட்டிங் என்ற பெயரில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களின் கூட்டத்தை நடத்தி மாமூல் வசூல் செய்யதும், அதை தனது உறவினர்களின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
87 போலீசாரிடம் பணம் பெற்றுக் கொண்டு டிரான்ஸ்பர் உத்தரவுகளை அள்ளித் தந்தது, துறைரீதியாக நடவடிக்கைக்கு உள்ளான 45 போலீசார் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தது, பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனியைக் கொலை செய்த குற்றவாளிகளை பணம் வாங்கிக் கொண்டு காப்பாற்ற முயன்றது,
தனது பிறந்த தினத்தன்று போலீஸாரிடம் இருந்தும் பொது மக்கள், ரவுடிகளிடம் இருந்தும் கட்டாயப்படுத்தி தங்க நாணயங்களை வசூலித்தது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானதையடுத்து அபிஷேக் தீக்ஷித் சென்னை கமாண்டோ பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 3 நாட்களாக இவரது சென்னை, கிருஷ்ணகிரி வீடுகள், உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனின் வீடுகள், கடைகள், கான்பூரில் உள்ள தீக்ஷித்தின் உறவினர்களின் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் 2.5 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, ரூ. 15 லட்சம் ரொக்கம் சிக்கியது.
மேலும் அபிஷேக் தீட்சித், அவரது மனைவி பாவனா, ராமச்சந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது.
கான்பூரில் உள்ள தீக்ஷித்தின் உறவினர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிட்டபோது  ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணகிரியில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களுடன் தீக்ஷித் கிரைம் மீட்டிங் நடத்திய மறுநாள், இந்த வங்கிக் கணக்குகளுக்கு பல லட்சம் ரூபாய் கிருஷ்ணகிரியில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால், கிரைம் மீட்டிங் என்ற பெயரில் மாதந்தோரும் போலீசாரிடம் பணம் வசூலித்துள்ளார் தீக்ஷித் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கிருஷ்ணகிரியில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது. மாதந்தோறும் யார் யார் எவ்வளவு பணம் எஸ்.பிக்கு கொடுத்தார்கள் என்ற விவரத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்து வருகின்றனர்
இந் நிலையில் அபிஷேக் தீக்ஷித் விரைவிலேயே கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக