வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

Ex MLA காதர் பாட்ஷா படுகொலை! கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்ஷா என்கிற வெள்ளைச்சாமி. கமுதியில் வீட்டில் இருந்த இவர் மர்ம நபர் ஒருவர்ரால் படுகொலை செய்யப்பட்டார். வெள்ளைச்சாமியை கொலை செய்ய முயன்றபோது, தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. வெள்ளைச்சாமியை கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற அந்த மர்ம நபர் பிடிபட்டதாகவும், பிடிபட்ட அந்த மர்ம நபர் அதே இடத்தில் அடித்துகொல்லப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த கொலை சம்பவத்தால் கமுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திமுக தலைவர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமான காதர் பாட்ஷா என்கிற வெள்ளைச்சாமி, இரண்டு முறை முதுகளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக