வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

14 பிள்ளை பெற்ற பெண் ஆடிய 'ஸ்டிரிப்டீஸ்' டான்ஸ்

14 பிள்ளைகளைப் பெற்ற அமெரிக்கப் பெண் ஒருவர் ஸ்டிரிப்டீஸ் என்ற நடனத்தை ஆடியதை ஏகப்பட்ட பேர் பெரும் ஆச்சரியத்துடன் கூடி நின்று கண்டு களித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் நாடியா சுலேமான். இவருக்கு அமெரிக்காவில் ஆக்டோமாம் என்று செல்லப் பெயர் உண்டு. நாடியாவுக்கு இந்தப் பெயர் வந்ததற்கான காரணம் மிக சுவாரஸ்யமானது. அதை பிறகு பார்ப்போம். முதலில் அவரது டான்ஸைப் பார்ப்போம்..
புளோரிடாவில் உள்ள ஸ்டிரிப் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்த நாடியா அங்கு 5000 டாலருக்கு ஒரு அட்டகாசமான டான்ஸைப் போட்டார். கடந்த வார இறுதியில் இந்த நடனம் அரங்கேறியது. நாடியா, ஸ்டிரிப்டீஸ் டான்ஸில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

நாடியாவின் ஆட்டத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். அவரது நடனத்தை விட நாடியாவின் உடல் கட்டுக்குத்தான் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அவர் ஒவ்வொரு உடையாக கழற்றி இறுதியில் நிர்வாண நிலைக்கு நெருக்கத்தில் வந்தபோது கூடியிருந்தோர் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டனராம்.
இந்த ஆட்டத்தை சமூகத்தில் பெரிய பெரிய அந்தஸ்தில் இருப்போரும் கூடி வந்து பார்த்தனர் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.
சரி நாடியா ஆடியதை ஏன் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் என்று கேட்கலாம். அதற்கு ஒரு பிளாஷ்பேக்குக்குப் போக வேண்டும்.
நாடியாவின் ஒரிஜினல் பெயர் நதாலி டெனிஸ் சுலேமான். 1975ம் ஆண்டு பிறந்தார். இவரது தாய் அமெரிக்கர், தந்தை ஈராக்கைச் சேர்ந்தவர், அமெரிக்காவில் செட்டிலானவர்.
நாடியா 2009ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் ஒரே நாளில் பிரபலத்தின் உச்சிக்குப் போனவர். காரணம், அந்த ஆண்டுதான் அவருக்கு ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்தன. உலகிலேயே இப்படி ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பெற்ற 2வது பெண் இவர்தான்.
1996ம் ஆண்டு மார்கே குடீரஸ் என்பவரை முதலில் மணந்தார் நாடியா. பின்னர் 2000மாவது ஆண்டு குடீரஸை விட்டுப் பிரிந்தார். இவர்களது விவாகரத்து 2006ம் ஆண்டு கோர்ட்டுக்குப் போய் 2008ல் இறுதியானது.
குழந்தை பிறக்காததால்தான் இவர்கள் இருவரும் பிரிந்தனர். நாடியா டெஸ்ட் டியூப் பேபிக்கு விரும்பினார். ஆனால் அதை குடீரஸ் எதிர்த்தார். இதனால்தான் விவாகரத்து வரை போய் விட்டார் நாடியா.
அதன் பின்னர் குடீரஸ் மறுமணம் புரிந்து 2 குழந்தைகளுக்குத் தந்தையானார். உண்மையில், நாடியா, 1997ம் ஆண்டிலேயே டெஸ்ட் டியூப் பேபி முறை மூலம் குழந்தைக்கு முயன்றார். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 2001ம் ஆண்டு அவருக்கு டெஸ்ட் டியூப் முறை மூலம் எலிஜா என்ற மகன் பிறந்தான். இதையடுத்து 2002ல் மீணடும் டெஸ்ட் டிபூய் மூலம் அமரா என்ற பெண்ணைப் பெற்றார் நாடியா. இப்படியே ஆறு குழந்தைகளை டெஸ்ட் டியூப் மூலம் பெற்றார் நாடியா. அதில் நான்கு பேர் மகன்கள், 2 பேர் மகள்கள் ஆவர்.
இனிதான் கிளைமேக்ஸ்...
2008ம் ஆண்டு மீண்டும் டெஸ்ட் டியூப் பேபிக்கு முயன்றார் நாடியா. அப்போது தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கம்ரவா என்பவரிடம், தன்னிடம் மீதமுள்ள அனைத்து கரு முட்டைகளையும் பயன்படுத்தி எத்தனை குழந்தைகள் கிடைக்க வாய்ப்புள்ளதோ அத்தனை குழந்தைகளையும் பெற விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து மொத்தம் 12 கரு முட்டைகளை பயன்படுத்தி செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்க முயற்சித்தார் டாக்டர் கம்ரவா. இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக டாக்டரின் மருத்துவ சான்றிதழ் பறிமுதல் செய்யப்பட்டு அவரது உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
நாடியாவுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. அவரது வீட்டு முன்பு போராட்டங்கள் கூட நடந்தன. இப்படி கடும் போராட்டத்துக்கு மத்தியில், நாடியாவுக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்தன. இப்படி பெரும் புரட்சி மூலம் மொத்தம் 14 குழந்தைகளுக்குத் தாயானார் நாடியா.
இப்படி பிரபலமான நாடியாதான் தற்போது ஸ்டிரிப்டீஸ் நடனத்துக்கு வந்துள்ளார். இதனால்தான் அவரது ஆட்டத்தைக் காண அத்தனை பேர் கூடியிருந்தனர்.
நாடியாவின் உடல் அமைப்பையும், அவரது நடனத்தையும் பார்த்தவர்கள், இவரைப் பார்த்தால் 14 குழந்தைகளைப் பெற்றவராகவே தெரியவில்லையே என்று ஆச்சரியத்துடன் பெருமளவில் அவருக்குப் பணத்தைப் பரிசாக அள்ளி வீசினர்.
நாடியா 14 குழந்தைகளைப் பெற்றிருக்கலாம்... ஆனால் தாய்மையின் பெருமைக்குரிய அடையாளம் அவரிடம் இல்லை என்றே கூற வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக