செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

கிரானைட் முறைகேடு பணத்தில் CPI கட்சித் தலைமைக்கு கொடுத்த வீடு!

எம்.எல்.ஏ. கிரானைட் முறைகேடு பணத்தில், கட்சித் தலைமைக்கு கொடுத்த வீடு!

Viru News,
பெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி, தற்போது சிறையில் உள்ள தளி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் மீது கிரனைட் குவாரி முறைகேடு குறித்து ஆராயத் துவங்கிய போலீஸ், முதல் கட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களால் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரியவருகிறது.
காரணம் தோண்ட, தோண்ட வெளிவரும் முறைகேடுகள்தான்!
தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், தமது கட்சித் தலைமையிலும், ஆட்சியில் உள்ள சிலருக்கும் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த வீடுகளும், தற்போது சிக்கலுக்கு உள்ளாக போகின்றன.

இவர் நடத்தும் கிரனைட் குவாரி மூலம் கிடைத்த பணம் வரவு வைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் கணக்கில் இருந்தே, கட்சித் தலைமைக்கும், இரு அதிகாரிகளுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதற்கு சில ஆதாரங்களை போலீஸ் கைப்பற்றியுள்ளது. இந்த விவகாரம் வெளியாகும்போது, இந்திய கட்யூனிஸ்ட் கட்சிக்குள் உள்கட்சி புயல் ஒன்று வீசக்கூடிய அபாயமும் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கிரானைட் குவாரி சோதனைகளின்போது, தேன்கனிக்கோட்டை அருகே கோட்டை சந்தானப்பள்ளி, நாகமங்கலம் பகுதிகளில் தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கிரானைட் வெட்டி எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், அவரது மனைவி விமலா, ராமச்சந்திரனின் சகோதரர் வரதராஜன் மற்றும் கிரானைட் குவாரிகளில் வேலை செய்யும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவானபின், கிரானைட் நிறுவனத்தின் ஆவணங்களை செக் பண்ணிய அதிகாரிகளே, நிறுவனத்தின் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம், வீடு கட்டும் செலவுக்கு கொடுக்கப்பட்ட விபரங்களை தெரிந்து கொண்டனர்.
குறிப்பிட்ட வீடுகளில் ஒன்று, அக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவருக்கு சொந்தமாக உள்ளது.
“சில விவகாரங்களில், சில கட்சிகள் எதற்காக அடக்கி வாசிக்கின்றன? ஏன் அடங்கிப் போகின்றன?” இந்தக் கேள்விக்கு, கிருஷ்ணகிரி பக்கத்தில் கிடங்கு தோண்டினால் பதில் கிடைக்கும் போலிருக்கிறதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக