செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

உங்களுக்குள்ளே chemistry ஒர்க் அவுட் ஆயிருச்சா?

தம்பதியர்கள், காதலர்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது ஒருவருக்குகொருவர் மனம் ஒத்துப்போய் ஈருடல் ஓருயிராக இருப்பது. இந்த நிலை ஏற்பட்டுவிட்டால் இருவரின் எண்ணங்களும், செயல்பாடுகளும் ஒன்றாகத்தான் இருக்குமாம். இதனைத்தான் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா குரூப் அடிக்கடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சி என்று சொல்கின்றனர்.
காதலர், தம்பதியர் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் ஆனதை எவ்வாறு உணர்ந்து கொள்வது. அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். காதலிப்பவர்களோ, திருமணம் செய்துகொண்டவர்களோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு இடையே பரஸ்பரம் ஒருவித காதல் உணர்வு கொழுந்து விட்ட எரிந்து கொண்டிருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் எதையும் எளிதில் ஈடுபாட்டோடு செய்யமுடியும்.பட்டாம்பூச்சி பறக்கணுமே
நமக்கு நெருக்கமானவரின் குரலை கேட்ட உடனே வயிற்றில் இன்ப அமிலம் சுரக்கிறதா? ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒருசேர பறக்கிறதா? அப்படி எனில் உங்களுக்கு அவர் மீதான ஈடுபாடு அதிகமாகிவிட்டது என்கின்றனர் நிபுணர்கள். நேரில் பார்த்தால் மின்சார அதிர்வும், குரலைக் கேட்டாலே இன்ப உணர்வுகளும் ஏற்படுகிறதா? அப்படி எனில் உங்களுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.
உறக்கமில்லா நாட்கள்

கணவரையோ, காதலரையோ சில நாட்கள் பிரிய நேரிடுகிறதா. அந்த நாளில் உங்களின் உறக்கம் தொலைந்துவிட்டதா? உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட ருசியை தொலைத்துவிட்டதா? அப்படி எனில் உங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பலமடைந்துவிட்டது என்று அர்த்தம்.
பலமுறை பெயரை உச்சரிக்கிறீர்களா?
உங்களை அறியாமல் உங்களவரின் பெயரை பலமுறை உச்சரிக்கிறீர்களா? எதைப்பார்த்தாலும் உங்களரின் முகமாக தெரிகிறதா? உங்களுக்கு காதல் நினைவுகளும், உணர்வுகளும் அதிகரித்துவிட்டது.
எந்த வேலையும் ஓடலையா?
உங்களவரை பார்க்காமல், அவரின் குரலை கேட்காமல் எந்த வேலையும் ஓடலையா? இது வேறொன்றுமில்லை லவ் கெமிஸ்ட்ரி படுத்தும் பாடுதான். அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எண்ண அலைகள் மூலம் காற்றில் பரவி உங்களை தாக்குகிறது.
உங்களை அறியாமல் புன்னகைக்கிறீர்களா?
எதையாவது பார்த்துக் கொண்டு இருக்கும்போதே புன்னகைக்கிறீர்களா? உங்களை அறியாமல் சிரிக்கிறீர்களா? உங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. ங
பார்த்தாலே பற்றிகொள்கிறதா?
உங்களுக்கு பிரியமானவர் பக்கத்தில் வந்தாலே பற்றிக்கொள்கிறதா? அவரைப் பற்றி நினைத்தாலே அனலிடைப் புழுவாய் துடிக்கிறீர்களா? நிச்சயம் உங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.
இந்த அறிகுறிகள் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது என்கின்றனர் நிபுணர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக