செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

Apollo வில் மதுரை ஆதீனம் நித்தியின் ‘மயக்க தீர்த்த side effect?

மதுரை ஆதீனம் சென்னை அப்பல்லோவில்! நித்தியின் ‘மயக்க தீர்த்தம்’ குடித்தாரா?

Viru News 
நித்தியானந்தாவை தளது இளவலாக முடிசூட்டிக் கொண்டதில் இருந்து அல்லாடிக் கொண்டுள்ள மதுரை ஆதீனம், அருணகிரிநாதருக்கு திடீரென உடல் நிலை சரியில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதீன வழக்கப்படி முதலில் அவருக்கு மடத்திலேயே வைத்து சிகிச்சை அளித்துப் பார்த்தார்கள். அதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று, சென்னைக்குக் கொண்டு வந்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
நித்தியானந்தாவை தனது இளைய ஆதீனமாக நியமித்தது முதலே மதுரை ஆதீனம் நிம்மதியைத் தொலைத்து விட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் ஏதோ ஒருவித நிர்ப்பந்தத்தின் கீழ் இருப்பதாகவும், நித்தியானந்தாவின் டியூனுக்கு ஆடியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், கூறப்படுகிறது.
இதில்தான் துவங்கியது தலைசுற்றல்!
சமீப காலமாக ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு கூட 2 நித்தியானந்தா ஆட்களை மடத்தை விட்டு வெளியேற்றினார் ஆதீனம்.
தற்போது மதுரை ஆதீனத்துக்கு ஏற்பட்ட சுகவீனத்துக்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுவது, சமீபத்தில் நித்தியானந்தா வலியுறுத்தி கூப்பிட்டதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்குப் புறப்பட்டுப் போனார் ஆதீனம். அங்கே போய்விட்டு திரும்பி வந்த பின்னரே அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
கோடைக்கானலில் என்ன நடந்தது என்பதை ஆதீனம் யாருக்கும் சொன்னதாக தெரியவில்லை.
நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தில் ஏதோ ஒருவித ‘மயக்க தீர்த்தம்’ கொடுக்கப்படுவதாக முன்பு கூறப்பட்டது. கோடைக்கானலில் அப்படியான தீர்த்தம் எதையாவது மூத்த ஆதீனம் அருந்தினாரா என்று தெரியவில்லை. இவருக்கு வைத்தியம் பார்த்த மதுரை வைத்தியர்கள் ஏதும் சொல்லாத நிலையில், சென்னையிலும், என்ன நோய்க்காக சிகிச்சை வழங்கப்படுகின்றது என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
கர்நாடகாவில் ‘உள்ளே’ இருந்துவிட்டு மதுரை திரும்பிய நித்தி சுவாமிகளை, வாசல்வரை ஓடோடிச் சென்று வரவேற்றவர் மூத்த ஆதீனம். இப்போது, இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார்.
நித்தி எப்போது ஓடோடி வரப்போகிறாரோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக