திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கீத்திகாவுடன் இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டார் மாஜி ஹரியானா அமைச்சர்!

சண்டிகர்: ஹரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கந்தா, தனது காதலி கீத்திகா சர்மாவுடன் முறையற்ற, இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டிருந்தார் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீத்திகா சர்மா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி கோபால் கந்தா. 11 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த கந்தா சமீபத்தில்தான் சரணடைந்தார்.
தற்போது கீத்திகாவின் பிரேதப் பரிசோதனை மற்றும் உடல்கூறியல் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் தூக்கில் தொங்கி கீத்திகா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீத்திகா, முறையற்ற, இயற்கைக்குகப் புறம்பான உறவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தவறான உறவில் தான் ஈடுபட்டதால் விரக்தி அடைந்து கீத்திகா தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 5ம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் கீத்திகா தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம். தற்கொலைக்கு முன்பு கீத்திகா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கோபால் கந்தா மற்றும் அருண் சத்தா ஆகியோர் தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக