திங்கள், 20 ஆகஸ்ட், 2012

8ம் வகுப்பு மாணவனை பிளேடால் கீறி, குச்சியால் அடித்து சித்திரவதை செய்த மாணவர்கள்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. 8ம் வகுப்பு மாணவனிடம் ராகிங் செய்த சக மாணவர்கள் அந்த மாணவனை பிளேடு மற்றும் குச்சியால் சரமாரியாக அடித்தும், உடலில் கிழித்தும் சித்திரவதை செய்துள்ளனர்.
மேற்கு மிதினாப்பூரில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது. சல்போனி உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் அந்த மாணவனை, சக மாணவர்கள் ஐந்து பேர் பள்ளி ஹாஸ்டலுக்கு இழுத்துக் கொண்டு போயுள்ளனர். பின்னர் அவனை குச்சியால் அடித்தும், பிளேடுகளால் உடம்பில் கிழித்தும் சித்திரவதை செய்துள்ளனர்.
மேலும், இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். உடலில் காயத்துடன் வந்த மகனைப் பார்த்துப் பதறிய பெற்றோர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து ஐந்து மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
8ம் வகுப்பு மாணவனிடம் இவ்வளவு குரூரமாக ராகிங் நடந்திருப்பது மேற்கு வங்கத்தை அதிர வைத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக