புதன், 1 ஆகஸ்ட், 2012

கண்ட கழிசடைகள் எல்லாம் பெரியாரை அவதூறு செய்கிறது.

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது? http://mathimaran.wordpress.com/

பெரியார் என்ன கடவுளா விமர்சிக்கக் கூடாதா?
-கனல்
அப்படின்னு எந்த கூமுட்ட சொன்னான்?
இது அடிப்படை அறிவற்ற கேள்வி.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இதை கேட்பது கேவலம்.
அதையும் பெரியாரோடு தொடர்பு படுத்திக் கேட்டபது மகா கேவலம்.
உலகிலேயே கடவுளை கடுமையாக விமர்சித்த ஊர் தமிழ்நாடுதான்.
அதை செய்தவர் பெரியார்.
அப்படியிருக்கையில் பெரியாரை கடவுளோடு ஒப்பிட்டு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக கேட்பது, கேனத்தனமான கேள்வி என்று யாரவது சொன்னால் கடுமையான வார்த்தையல்ல.
தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடைய கொள்கைகளுக்காக மிக மோசமாக விமரிக்கப்பட்டவரும், எதிரிகளால் செருப்பால் தாக்கப்பட்டதும் அப்படி தாக்குதலுக்கு உள்ளானபோதும்கூட அதை விமர்சன கண்ணோட்டத்தோடு அனுகிய ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே.
‘பெரியார் என்ன கடவுளா விமர்சிக்க கூடாதா?‘ என்கிற தமிழ்த் தேசியவாதிகள்தான் பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக கட்டமைக்கிறார்கள்.
‘பெரியார் மட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்; பிரபாகரன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?‘ என்று கேட்கிற தைரியம், பெரியார் இயக்கங்களுக்கே இல்லை என்பதால்தான், கண்ட கழிசடைகள் எல்லாம் பெரியாரை அவதூறு செய்கிறது.
பெரியாரை ஆதரிப்பதற்கு யாராவது வெளிநாட்டிலிருந்து பணமாகவோ, பொருளாகவோ அல்லது பதிப்பகம், சினிமா, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் பங்குதாரராகவோ சேர்த்துக் கொண்டால், பெரியாரை கேவலமாக விமர்சிப்பவர்களே, அவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பார்ப்பார்களோ!
பணத்துக்கு என்ன பண்றது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக