புதன், 1 ஆகஸ்ட், 2012

டாக்டர் .முத்துலெட்சுமி ரெட்டி தேவதாசி முறையை தமிழகத்தில்


புதுக்கோட்டை ஜூலை 31- புதுக் கோட்டையில் பிறந்து இந்திய அளவில் சாதனை படைத்தவர் டாக்டர் .முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் ஆவார். இந்தி யாவின் முதல் பெண் மருத்துவரும் பெண்கள் குழந்தைகளுக்காகவும் அவரகளது நலன் மற்றும் உரிமைகளுக்காக வும் பாடுபட்டவர். தமிழகத்தில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்க முன்னின்று பாடு பட்டு போராடி வெற்றி யும் பெற்றவர். பகுத்த றிவு அறிவியல் சிந்தனை கள் அனைவரும் பெற வேண்டும் என்று தொடர பிரச்சாரம் செய்தவர். 
அவரது 127-ஆவது பிறந்த நாளான நேற்று 30.7.2012 - புதுக் கோட்டை திலகவதியார் ஆதீனத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய் யப்பட்டது. உருவப்படத்துக்கும் மலர் மாலை வைக்கப் பட்டது. வரும் 4.8.2012-அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக