ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

அடாவடி தனத்தில் அதிமுகவினர் மிஞ்சிவிட்டனர்

மதுரை மாவட்டத்தில், அரசுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, கிரானைட் கற்களை வெட்டி எடுத்தவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் முன்வரவில்லை. சில கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கிரானைட் நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு, "மலை முழுங்கிய மகாதேவன்'களாக (பினாமிகள்) செயல்பட்டனர். இதனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாய்மூடி மவுனியாகி விட்டனர் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில், சந்தேகத்திற்கு இடம் அளிக்காமல், நேர்மையான விசாரணை நடத்தி முறைகேடு புரிந்தவர்கள், சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா கவனமாக உள்ளார்.
 முதல்வரோ செல்வி ஜெயலலிதா ஜெயராமன் ... போலீஸ் மந்திரியோ Miss. J. Jayalalitha ... பொதுப்பணித்துறை மந்திரியும் செல்வி ஜெ ஜெயலலிதா...... வருவாய்த் துறை மந்திரியும் குமாரி ஜெ ஜெயலலிதா ... சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை ..... இந்த துறைக்கு அமைச்சர் என்னவோ தங்கமணி, ஆனா அவருக்கு அது தெரியுமா என்று எனக்கு தெரியாது, துறையோட முழு அதிகாரி மந்திரியும் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா.. ஊழலோ இருபது வருடமா ஜோரா நடக்குது .. அதில் 50% ஆட்சியில் இருந்ததும் நம்ம நடமாடும் பல்கலைக்கழகம், குமாரி ஜெயலலிதா தான்... ... ஆக, சம்பத்தப்பட்ட எல்லாத்துக்கும் ஏகபோக அதிகாரி, .நடமாடும் கம்ப்யூட்டர், மெஜாரிட்டி ஆட்சியின் தலைவி, விரல் சொடுக்கினால் வீரம் விளையாடும், சாட்டையை சுழற்றினால் விதியே மாறும்...அத்தகைய "தி ஆல் பவர்புல்".. சட்சாத் நம்ம்ம மம்மியே தான்... இந்த விசயத்துக்கு தினமலர் மாஞ்சு மாஞ்சு சொன்ன அந்த 90 நிமிடங்களைத் தவிர வேறு எந்த சின்ன கல்லாவது மம்மி புரட்டி இருக்கிறாரா ?? அதைக் கேட்கத் துணிவோ, முதுகெலும்போ இல்லாமல், தினமலர் எதிர்கட்சிகளை எதற்காக கேட்கிறது ??

அதன் அடிப்படையில் தான் மாவட்ட கலெக்டர், போலீசார் விசாரணை, வருவாய் துறை ஆய்வு பணிகள் என பல கோணங்களில் தீவிரம் அடைந்துள்ளன.கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, எழுந்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சாதக, பாதகங்களையும் முதல்வர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தி.மு.க.,வை பொருத்தவரை அப்பிரச்னையில் வாய்திறக்காமல் மவுனமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தி.மு.க., அறிவித்த போரட்டங்களுக்கான காரணங்களில் கூட கிரானைட் முறைகேடு இடம் பெறவில்லை.

இது குறித்து கனிமவளத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சியில் கிரானைட் முறைகேடுகள் கொடிக்கட்டி பறந்தது. குவாரி உரிமையாளர்கள், சட்டவரம்பு மீறி, "மலை முழுங்கும் மகாதேவன்களாக' செயல்பட்டனர். தங்களுக்கு கிடைக்கும் 100 சதவீத மொத்த வருவாயில் 40 சதவீதம் தங்களுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் அரசு அதிகாரிகளுக்கும், மீதமுள்ள 40 சதவீதம் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளனர். இதில் கட்சி பாகுபாடு கிடையாது. சின்டிகேட் முறையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். தேசிய கட்சிகளும் இதில் விதி விலக்கு அல்ல. அவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.சிவப்புக் கொடி கட்சியில் ஒரு கட்சி தான் போர்க்கொடி தூக்கியுள்ளதே தவிர, மற்றொரு கட்சி வாய் திறக்க முடியாமல் தவிக்கிறது. ஜாதிக் கட்சியின் தலைவர் ஒருவரும் குரல் கொடுத்தார். திடீரென தற்போது அவரது சுருதியும் குறைந்து விட்டது. முறைகேடுக்கு துணை போன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றொரு எதிர்க்கட்சி குரல் கொடுத்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில் பவர்புல்லாக விளங்கிய ஒரு உயர் அதிகாரியின் சம்பந்தி, கிரானைட் குவாரியின் உரிமையாளராக இருந்ததால் இன்னும் அவர்களுக்கு வசதியாக இருந்தது. அதேபோல் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் இருவரும், கிரானைட் தொழிலில் பினாமிகளாக செயல்பட்டுள்ளனர். இதனால் தான் தி.மு.க.,வும் மவுனம் காத்து வருகிறது. மாவட்ட வாரியாக பொதுமக்கள் பிரச்னை மற்றும் உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, தி.மு.க.,வினர், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த வேண்டும் என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது. ஆனால், போராட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை குறிப்பிடவில்லை. மதுரை மாவட்டத்தில் கிரானைட் பிரச்னையையும் மையப்படுத்தி போõரட்டம் நடத்த வேண்டும் என, தி.மு.க., வலியுறுத்த வில்லை. இதிலிருந்து அக்கட்சிக்கும் கிரானைட் விவகாரத்தில் குரல் கொடுக்க விரும்பவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக