திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஆண்ட்ரியா விஜய் படத்தில் பாட்டு

ஒரு பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய நடிகை ஆண்ட்ரியா முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், 
 மங்காத்தா போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் மார்கெட் இல்லாத நடிகையாகவே இருந்தார். திடீரென்று கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஒப்பந்தமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கு விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பாட்டு பாட வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முருகதாஸிடம் இந்த படத்தில் தனக்குமொரு வாய்ப்பு தரும்படி அவராகவே வ்முன்வந்தௌ கேட்டுள்ளார் ஆண்ட்ரியா. முருகதாஸும் யோசித்து சொல்வதாக கூறிவிட்டாராம்.
நடிகை லட்சுமி ராய் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் அவரது படத்தில் வாய்ப்பு தருமாரு கேட்டுள்ளாராம். லட்சுமிராய் ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடிக்க பல நடிகைகளும் ஆர்வமாக உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக