வியாழன், 30 ஆகஸ்ட், 2012

இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் போடும் நண்பர்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
இளவரசர் ஹாரியின் நிர்வாண போட்டோக்கள் வெளியானதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ராணுவ நண்பர்கள், ரசிகர்கள் ஏராளமானோர் தங்களது நிர்வாண படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு வருகின்றனர். 
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் , மறைந்த டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி (27). விடுமுறையை கழிக்க சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஸ்டார் ஓட்டலில் இளம்பெண்களுடன் ஜாலியாக இருந்தார். ஓட்டல் அறையில் இளம்பெண்ணுடன் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற படங்கள் பத்திரிகைகள், இணைய தளங்களில் வெளியாகின. இது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேவையற்ற தர்மசங்கடங்களை தவிர்க்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தை ஹாரி மூடினார். இந்நிலையில் ஹாரியின் ரசிகர்கள், நண்பர்கள், ராணுவ நண்பர்கள் உள்ளிட்டோர் இணைந்து பேஸ்புக்கில் ‘சப்போர்ட் பிரின்ஸ் ஹாரி வித் எ நேகட் சல்யூட்’ என்ற பெயரில் ஹாரி ஆதரவு குரூப் ஒன்றை தொடங்கியுள்ளனர். நாமும் நமது நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ஹாரிக்கு ‘நிர்வாண’ மரியாதை செலுத்துவோம் என்பது இதன் கருத்து.
12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த குரூப்பில் சேர்ந்து ஹாரிக்கு ‘நிர்வாண’ மற்றும் ‘அரை நிர்வாண’ சல்யூட் அடித்து வருகின்றனர். ஆப்கனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் சிலரும் ராணுவ டாங்க் முன்பு நின்று நிர்வாண போஸ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக