சனி, 4 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவில் சிவாஜியின் கர்ணன்! இன்று ரீலிஸ்

Shivajis Karanan film released  in America!Re Release இல்  125 நாட்களை தாண்டி ஓடிய கர்ணன் 
அமெரிக்கா, சான்பிரான்சிஸ்‌கோவில் சிவாஜியின் கர்ணன் படம் இன்று ரீலிஸ் ஆகிறது. வார இறுதி நாளாக இருப்பதால் இதைக் காண ரசிகர்கள் பெருமளவில் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவாஜியின் கர்ணன் படம் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 48 வருடத்துக்கு முன்பு வந்த இப்படத்துக்கு இப்போதும் வரவேற்பு இருந்தது. தியேட்டர்களில் பல வாரங்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக நிரம்பின. சென்னையில் 125 நாட்களை தாண்டி ஓடியது. ரூ.5 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.

இதனால் இப்படத்தை அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று அமெரிக்காவில் ரீலிஸ் ஆகிறது. தமிழில் மட்டுமின்றி ஆங்கில சப்டைட்டிலுடனும் வெளியிடுகிறார்கள். சிவாஜியின் வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் நவீன தொழில் நுட்பத்தில் தயாராகிறது. ஓரிரு மாதங்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர் என்பது கூடுதல் தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக