திங்கள், 6 ஆகஸ்ட், 2012

குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரேவே திடீர் அறிவிப்பு


 Team Anna Disbanded மும்பை: வலுவான லோக்பால் மசோதாவுக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட "அன்னா குழு" கலைக்கப்பட்டுவிட்டதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
இதுபற்றி அன்னா ஹசாரே தமது வலைப்பூவில் (ப்ளாக்கில்) கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்காக இக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குழுவின் பணி இப்போது முடிந்து போய்விட்டது. மத்திய அரசுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை. அதனால் அன்னா குழு கலைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இது தொடர்பாக இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்னா ஹசாரே குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர்தான் அரசியலில் இணையப் போவதாக அறிவித்திருக்கின்றனர் என்றும் இதில் அன்னா ஹசாரேவுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. புதிய அரசியல் பாதையிலிருந்து அன்னா ஹசாரே விலகியிருக்க விரும்புவதாலேயே இந்த முடிவை அன்னா ஹசாரே அறிவித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் முன்பு போல் பொதுமக்களிடம் தமக்கு ஆதரவு இல்லை என்பதை அண்மைய உண்ணாவிரதம் வெளிப்படுத்திவிட்டது. இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தை வலுக்கட்டாயமாக முடிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதில் தேர்தல் அரசியலுக்குப் போனால் நிச்சயம் மூக்குடைபடும் என்பதை நன்கு புரிந்து கொண்டதால்தான் அன்னா ஹசாரே கொஞ்சம் ஒதுங்கிப் போய்விடுவது என்று முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அனைத்து கட்சிகளும் ஆரம்பித்த பின்னர்தான் உடையும்... இங்க ஆரம்பிக்கும்போதே "அமர்க்களம்"(!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக