ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

அம்பேத்கர் முதலிடம் - 2 கோடி பேர் வாக்களிப்பு! இரண்டாவது கலாம்

 Dr Br Ambedkar The Greatest Indian இந்தியாவின் மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கர் - 2 கோடி பேர் வாக்களிப்பு!

இந்த தேர்வில் முதல் பத்து இடங்களைப் பிடித்த தலைவர்கள் மற்றும் பிற துறையினர்...
1. பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர்
2. டாக்டர் அப்துல்கலாம்
3.வல்லபபாய் படேல்
4.ஜவஹர்லால் நேரு
5.அன்னை தெரசா
6.ஜேஆர்டி டாடா
7.இந்திரா காந்தி
8.சச்சின் டெண்டுல்கர்
9. அடல் பிகாரி வாஜ்பாய்
10. லதா மங்கேஷ்கர்
டெல்லி: மகாத்மா காந்திக்குப் பின் சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் யார் என்பது குறித்து மக்களிடம் நடத்திய வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் முதலிடம் பெற்றுள்ளார்.
அவருக்கு 2 கோடி பேர் வாக்களித்து, நாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆன்லைன், கள ஆய்வு மற்றும் நடுவர் வாக்குகள் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
இவற்றில் அண்ணல் அம்பேத்கருக்கு 2 கோடி வாக்குகள் கிடைத்தன. தேசத்தின் ஒப்பற்ற தலைவர் அவரே என்பது பெருவாரியான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கரை ஒரு தலித் சமுதாய தலைவராக, பிரதிநிதியாகப் பார்க்கக் கூடாது என்றும், அவர் இந்த நாட்டைக் கட்டமைத்த ஒப்பற்ற சிற்பி என்பதை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
தேசத்தின் தந்தைக்கு நிகரானவர், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என்றெல்லாம் அம்பேத்கருக்கு புகழ் மாலை சூட்டியுள்ளனர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள்.
இந்த தேர்வில் முதல் பத்து இடங்களைப் பிடித்த தலைவர்கள் மற்றும் பிற துறையினர்...
1. பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர்
2. டாக்டர் அப்துல்கலாம்
3.வல்லபபாய் படேல்
4.ஜவஹர்லால் நேரு
5.அன்னை தெரசா
6.ஜேஆர்டி டாடா
7.இந்திரா காந்தி
8.சச்சின் டெண்டுல்கர்
9. அடல் பிகாரி வாஜ்பாய்
10. லதா மங்கேஷ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக