செவ்வாய், 24 ஜூலை, 2012

ராஜேஷ் கன்னாவும் டிம்பிள் கபாடியாவும் ஏன் பிரிந்தார்கள்? mrs,anil ambani?

Why Dimple Kapadia Left Rajesh Khan ஒரே பிரஷ்ஷில் பல் விளக்கிய ராஜேஷ் கன்னாவும், டினா முனீமும்!

மும்பை: ராஜேஷ் கன்னா போய் விட்டார். ஆனால் அவரைப் பற்றிய செய்திகளுக்கு இப்போதைக்கு மறைவு இல்லை போலும். >அடுத்தடுத்து அவரைப் பற்றிய செய்திகள், ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ராஜேஷ் கன்னாவும், அவரது காதல் மனைவி டிம்பிள் கபாடியாவும் ஏன் பிரிந்தார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் காதல் மன்னனான ராஜேஷ் கன்னா, 1973ம் ஆண்டு டிம்பிள் கபாடியாவை மணந்தார். அப்போது டிம்பிளுக்கு வயது வெறும் 16தான். ஆனால் கன்னாவுக்கோ 31 ஆகும். இத்தனை பெரிய வயது வித்தியாசம் இருந்தாலும் கூட அவர்களின் காதலுக்கு அது இடையூறாக வரவில்லை. மாறாக நெருக்கமான அன்பையும், உறவையும் தொடர்ந்து அவர்கள் மண வாழ்க்கையையும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத்தான் நடத்தினர்.
ராஜேஷ் கன்னாவை மணந்த ஆறு மாதத்தில் டிம்பிளின் முதல் படமான பாபி வெளியானது. ஆனால் அதன் பின்னர் டிம்பிள் நடிக்கக் கூடாது என்று ராஜேஷ் கன்னா தடை போட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரை சமாதானப்படுத்தி தொடர்ந்து நடித்து வந்த டிம்பிள் பின்னர் ராஜேஷ் கன்னாவை சமாளிக்க முடியாமல் 1984ம் ஆண்டு அவரிடமிருந்து விலகி வந்தார். தொடர்ந்து படங்களில் நடித்தார். பின்னர் படங்களைக் குறைத்துக் கொண்டு தனது இரு மகள்களுக்காக வாழ ஆரம்பித்தார்.
இந்த நிலையில்தான் அப்போது ஹாட்டான நாயகியாக இருந்த டினா முனீமும், ராஜேஷ் கன்னாவும் காதலில் விழுந்தனர். இந்தக் காதல் படு நெருக்கமாக போக ஆரம்பித்தது. மற்றவர்களைப் போல தங்களது உறவை இவர்கள் மறுக்கவில்லை, மறைக்கவில்லை.வெளிப்படையாக ஒத்துக் கொண்டனர். இருவரும் ஆழமாக காதலிப்பதாகவும் அறிவித்தனர்.
மேலும் இருவரும் சேர்ந்தும் வாழ்ந்தனர். ஒரே பிரஷ்ஷில்தான் பல் துலக்குவார்கள். ஒரே சோப்பைத்தான் போட்டுக் கொள்வார்கள். அந்த அளவுக்கு நெருக்கமாகிக் கிடந்தனர்.
ஆனால் பின்னாளில், டினாவும் ராஜேஷைப் பிரிந்தார். அப்போது அவர் கூறுகையில், யாரையும் காதலிக்கும் மன நிலை இப்போது ராஜேஷ் கன்னாவுக்கு இல்லை என்று கூறினார். தன்னை மணந்து கொள்ளுமாறு டினா வலியுறுத்தியதாகவும், ஆனால் அதை ராஜேஷ் கன்னா ஏற்கவில்லை என்றும், இதனால்தான் அவர்களது காதல் முறிந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் டினா முனீம், தொழிலதிபர் அனில் அம்பானியை மணந்தார். அத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக