வெள்ளி, 13 ஜூலை, 2012

Mass ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் ஈ!


 பிரம்மாண்டம். ஹாலிவுட் படத்துக்கு சவால்விடுகிற வகையில் பல காட்சிகளை அமைத்திருக்கிறார்
தன் எதிர்வீட்டில் வசிக்கும் சமந்தாவை பல வருடங்களாக சுற்றி சுற்றி காதலிக்கிறார் நானி. சமூக சேவை செய்யும் சமந்தாவிற்கு கோடீஸ்வர தொழிலதிபர் சுதீப், பதினைந்து லட்சம் கொடுக்கிறார். சமந்தாவை தன் வசப்படுத்தவே சுதீப் அந்த தொகையை கொடுக்கிறார். சமந்தா நானியை விரும்புகிறார் என்பதை அறிந்து நானியை சித்திரவதை செய்து கொலை செய்கிறார். சுதீப்பை பழிவாங்க நானி ஈ-யாக மறுபிறவி எடுக்கிறார். 
ஈ என்ன செய்துவிட முடியும் என்று சாதாரணமாக நாம் நினைக்கக் கூடும்.
ஆனால் அந்த ஈ செய்யும் அட்டகாசங்களும் அளப்பறைகளும் பல. வில்லன் சுதீப் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படாதபாடு படுகிறார். நானி தான் ஈ-ஆக மறுஜென்னம் எடுத்திருக்கிறார் என்பது சமந்தாவுக்கு தரியவர. தன் காதலனைக் கொன்ற சுதீப்பை கொல்வதற்கு ஈ-க்கு பல உதவிகள் செய்கிறார் சமந்தா. சின்ன சின்ன ஆயுதங்கள் செய்துகொடுப்பது, ஈ-க்கு தகுந்தவாரு ஹெல்மெட் செய்து கொடுப்பது என சமந்தா ஈ-க்கு உதவி செய்கிறார். இறுதியில் சுதீப்பை ஈ பழி வாங்கியதா? சுதீப் சமந்தாவை பழி வாங்கினாரா? என்பதே கலக்கலாக அசத்தும் அசத்தலான அதிரடி சிஜி க்ளைமேக்ஸ்.;படத்தின் முதல் அரைமணி நேரத்தில் அழகான லவ்வர் பாயாக வந்து நினைவில் பதிந்துவிடுகிறார் ஹீரோ நானி. சமந்தாவும் அளவான நடிப்போடு அழகாக வளம்வருகிறார். தனது வில்லத்தனமான நடிப்பில் காமெடி கலந்து அசத்துகிறார் சுதீப். இவர்கள் எல்லோரையும் விட படத்தின் ஹைலைட் ஈ தான். கமர்ஷியல் ஹீரோக்கள் அத்தனைபேரையும் தூக்கி சாப்பிடுவது போல அசத்தலான ஹீரோயிசங்களை செய்கிறது ஈ! கலக்கலான டான்ஸ், பாடல், சண்டை, அதிர்ச்சி, மகிழ்ச்சி, அழுகை, தலையைக் கோதி ஸ்டைல் பண்ணுவது என்று அனைத்தயும் வெளிப்படுத்துகிற வகையின் ஈ-யை கிராஃபிக்சில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்மௌலி. பல இடங்களில் கிரேஸி மோகனின் வசனங்கள் பளிச்சென தெரிகிறது.மனிதர்கள் பேசுவது எப்படி ஈ-க்கு புரியும், ஒரு சின்ன ஈ இவ்வளவு வேலைகள் செய்யுமா? ஈ எப்படி மனிதனைவிட புத்திசாலித்தனமாக சிந்திக்கும்? என பல கேள்விகள் படம் பார்ப்பவர்களுக்கு தோன்றலாம். ஆனால் அந்த கேள்விகளை ஓரம் தள்ளி வைத்துவிடுகிறது. இயக்குனரின் பிரம்மாண்டம். ஹாலிவுட் படத்துக்கு சவால்விடுகிற வகையில் பல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். ‘பிரம்மாண்ட இயக்குனர்’ என்று சொல்லப்படுகிறவர்கள் இந்த மாதிரி ஏதாவது வித்தியாசமா யோசித்து படம் எடுத்தால் நல்லா இருக்கும்!<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக