வெள்ளி, 13 ஜூலை, 2012

தேர்வுக்கு பர்தா அணிந்து வரக்கூடாது -தேர்வு அலுவலர் கண்டிப்பு


சென்னை விருகம்பாக்கம் பாலலோக் தனியார் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்தார். ஆனால் தேர்வு அறைக்குள் பர்தாவுடன் வரக்கூடாது என்று ஊழியர்கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
ஆனால் பர்தாவை அகற்ற அந்த பெண் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் எடுத்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்கலாம். உடை விஷயத்தில் தலையிடகூடாது என்று அந்த பெண் காரசாரமாக வாதம் செய்தார்.
ஆனால் தேர்வு மைய ஊழியரோ பர்தா அணிந்து தேர்வு எழுதினால் நீங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் விவாதிப்பது எப்படி தெரியும்? என்று கூறி உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதனால் சிறிது நேரம் பரபப்பு ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னரே  பர்தா அணிந்தபடியே அவர் தேர்வு ஏழுத அனுமதிக்கபட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக