ஞாயிறு, 8 ஜூலை, 2012

சரக்கு சர்ச்சை! ஸ்ரேயா is busy

சில தென்னிந்திய நடிகைகளின் லேட்டஸ்ட் பொழுதுபோக்காக இருப்பது நடிகை சானாகானை திட்டித் தீர்ப்பது தான். பெங்களூரில் இருந்துகொண்டு ’தென்னிந்திய நடிகைகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்’ என்று கூறிய ஒரு வரி வசனத்தில் ஃபேமஸாகி கோடம்பாக்கத்தை தலைதூக்கி பார்க்கவைத்துவிட்டார் சானாகான்.  
பல நடிகைகளும் தங்களது கண்டனங்களை சானாகானின் மொபைலுக்கு அனுப்பிவிட்டு தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சானாகானின் கருத்து பற்றி பேசிய ஸ்ரேயா “யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிப்பதற்கு மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. என் தனிப்பட்ட வாழ்க்கையை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை”  I am busy ? என்று வேறு கூறியுள்ளார். 
நடிகை த்ரிஷாவும் இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்போவதாக கூறப்பட்டதால் இது பற்றி த்ரிஷாவிடன் கேட்டபோது “ நான் புகார் கொடுக்கப் போகிறேனா? யார் சொன்னது? எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இதையெல்லாம் கவனிக்க எனக்கு நேரமில்லை” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக