திங்கள், 30 ஜூலை, 2012

Hansraj:உங்கவீட்டுப் பிள்ளையா நினைச்சி என்னை மன்னிச்சிடுங்க

Saxena Apologises His Past Behavior
சென்னை: 'இது சன் டிவி படம். இங்க வேற மீடியாவுக்கு என்ன வேலை? உங்களை எவன் கூப்பிட்டான்...' - சன் டிவி படங்கள் ரிலீஸின் போதெல்லாம் மீடியாக்காரர்கள் எதிர்நோக்கிய அவமானம் இது. அதிலும் எந்திரன் நேரத்தில் உதாசீனத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டவர் சக்சேனா.
ஆனாலும் மீடியாக்காரர்களில் பெரும்பாலானோர் இவரைப் போன்றவர்களுக்காக தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. பாரபட்சமில்லாமல்தான் எழுதி வருகின்றனர் இன்னமும்!
ஆனால் காலச் சக்கரம் சுழலாமலா போய்விடும்...
இப்போது யாரை உதாசீனப்படுத்தினாரோ அவர்களையெல்லாம் மீண்டும் தேடி வர வேண்டிய நிலை சக்ஸேனாவுக்கு. சன் பிக்சர்ஸிலிருந்து ராஜினாமா செய்த பின், சில மாதங்கள் அமைதியாக இருந்தவர், இப்போது தன் பெயரில் சாக்ஸ் பிக்சர்ஸ் என்று புது நிறுவனம் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் சார்பில் ப்ரியாமணி நடித்த சாருலதா என்ற படத்தை வெளியிடுகிறார் (சூர்யாவின் மாற்றானுக்கு போட்டியாம்!!). அடுத்து தமிழ் - தெலுங்கு இருமொழிப் படமொன்றையும் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று சென்னை சத்யம் அரங்கில் நடந்த நான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சக்ஸேனாவும் வந்திருந்தார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த ஆண்டுகளில் நான் எப்படியெல்லாமோ நடந்து கொண்டேன். முன்பு நான் மீடியாவை நான் புறக்கணித்தது உண்மைதான். அதன் பின்னணி வேறு. நான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க.. நான் உங்க வீட்டுப் பிள்ளை. ஆதரவு கொடுங்க," என்றார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக