திங்கள், 30 ஜூலை, 2012

47 பேர் பலி சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்

 Fire On Tamil Nadu Express 25 Dead Several Injured
நெல்லூர்: டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. 
தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். அப்போது முதலில் தீயில் கருகிய நிலையில் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தீக்காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டன. ஆனால் எஸ் 11 கோச்சில் 72 பயணிகள் வந்துள்ளனர். இதனால் மற்றவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் மேலும் பலரது கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது

சம்பவ இடத்தில் நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தெற்கு ரயில்வே அதிகாரிகளும் நெல்லூர் விரைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக