ஞாயிறு, 22 ஜூலை, 2012

Emy jackson 75 லட்சமாக உயர்த்திய எமி ஜாக்சன்

ஒரு படம் ஓடி ஹிட்டாகிவிட்டாலே தங்களது சம்பளத்தை உயர்த்திவிடும் நம்மூர் நடிகர், நடிகையர்களுக்கு மத்தியில் வெளிநாட்டில் இருந்து வந்த எமி ஜாக்சன் மட்டும் என்ன விதிவிலக்கா...?,
 அவரும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். விஜய் இயக்கிய மதராஸபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீ-மேக்கில் நடித்தார். இப்போது மீண்டும் விஜய் இயக்கத்தில் தாண்டவம் படத்திலும், ஷங்கர் இயக்கும் ஐ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மதராஸபட்டினம் படத்தில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிய எமி, அடுத்து தாண்டவம் படத்தில் ரூ.30-40 லட்சம் சம்பளம் வாங்கினார். இப்போது அதையும் தாண்டி, ஷங்கரின் ஐ படத்தில் தனது சம்பளத்தை ரூ.75 லட்சமாக உயர்த்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக