ஞாயிறு, 22 ஜூலை, 2012

பா.ஜ.க. முதலமைச்சர்மீது ரூ.140 கோடி ஊழல் குற்றச்சாட்டு


ராய்ப்பூர், ஜூலை 21- சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமன்சிங் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. ராமன்சிங் மீது முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றசாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் பாரத் அலுமினியம் நிறுவனம் (பால்கோ) உள்ளது. இந்த நிறுவனத்தின் நிலம் மற்றும் சொத்துக்கள் சமீபத்தில் சீரமைப்பு செய்யப்பட்டன.

அப்போது முதலமைச்சர் ராமன்சிங், மற்றும் பால்கோ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் உம்மன், குஞ்சன் குப்தா ஆகியோர் ரூ.140 கோடிக்கு ஊழல் செய்ததாக காங்கிரசார் குற்றம் சாட்டினார்கள்.


மேலும் இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ராமன்சிங் மீது ரூ.140 கோடி ஊழல் செய்ததாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் புபேஸ் பகெல் ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று ராய்ப்பூர் நீதிமன்றத்தில் நடந்தது.

குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கூறிய நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை வருகிற 4 ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக