வெள்ளி, 27 ஜூலை, 2012

சன்டிவி பங்குகள் பெரும் சரிவு CBI விசாரணை எதிரொலி

சிபிஐ விசாரணை எதிரொலி: பங்குச் சந்தையில் 40% சரிவை எட்டிப் பார்த்த சன் டிவி பங்குகள்

சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் விசாரிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் இன்றைய பங்குச் சந்தையின் தொடக்கத்தில் சன் டிவியின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ரூ549 கோடி லஞ்சமாகப் பெற்றது என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாநிதி, கலாநிதி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பும் தயாநிதியிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக நேற்று தகவல் வெளியானது.

இதையடுத்து இன்று பங்குச் சந்தையின் தொடக்கத்தில் சன் டிவியின் பங்குகள் 40 விழுக்காடு சரிவைத் தொட்டது. இன்றைய பங்குவர்த்தகத்தின்போது சன் டிவியின் பங்குகள் மதிப்பு ரூ295 ஆக இருந்தது. அதன் பின்னர் சட்டென ரூ176.75க்கு குறைந்தது. இருப்பினும் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை . பின்னர் இதன் மதிப்பு ரூ262.55 ஆக இருந்தது. இருப்பினும் இது 11 விழுக்காடு சரிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக