வெள்ளி, 27 ஜூலை, 2012

தனுஷ் ஜோடியாக அமலா பால்

கொஞ்ச நாட்களாக அமலா பால் பற்றி ஆஹா ஓஹோவென்று அவருக்கு வேண்டிய சிலர் பப்ளிசிட்டி செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.
தனுஷை வைத்து சற்குணம் இயக்கும் சொட்ட வாளக்குட்டியில், அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.
அமலாவுக்கு தமிழில் உள்ள ஒரே படம் நிமிர்ந்து நில். வேறு படங்கள் இல்லாத நிலையில், தான் அமெரிக்கா போய் அழகைக் கூட்டிக் கொண்டு வந்த பெருமையை மீடியாவில் பரபரவென பரவவிட்டார்.
விளைவு, ஏற்கெனவே ஜோடி சேரவிருந்து கடைசியில் கைகூடாமல் போன தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.
3 படத்தில் தனுஷ் ஜோடியாக முதலில் ஒப்பந்தமாகி பிரஸ் மீட்டில் கூட கலந்து கொண்டவர் அமலா பால் என்பது நினைவிருக்கலாம்.
சொட்ட வாளக்குட்டி படத்தை கதிரேசன் தயாரிக்கிறார். இவர் பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்தவர். களவாணி, வாகை சூட வா புகழ் சற்குணம் இயக்குகிறார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையிலும் ஹீரோயின் முடிவாகாமல் இருந்தது.
அப்போது பார்த்து, மீடியாவில் இந்த திடீர் அழகி அமலாவின் பேட்டியும் படங்களுமாக நிறைக்க, சரி வரவச்சுத்தான் பார்ப்போமே என அழைத்தாராம் சற்குணம். பேச்சு இப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அளவுக்குப் போய்விட்டதாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக