நித்தியானந்தா சுனாவூலி பகுதியில் எல்லை பாய்கிறார்! கிரேட் எஸ்கேப் பிளான்!!
Viruvirupu
சிக்கலுக்கு மேல் சிக்கலில் உள்ள நித்தியானந்தா சுவாமிகள்
திடீரென கைலாய மலைக்கு விசிட் அடிக்கப் போவதாக கூறியிருப்பதன் பின்னணியில்,
அவரது கிரேட்-எஸ்கேப் திட்டம் உள்ளது என்கிறார், நித்திக்கு பயண
ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் தனியார் பயண நிறுவன செயின் ஒன்றின் அதிகாரி
ஒருவர்.
வெவ்வேறு மாநிலங்களில் கிளைகள் வைத்து இயங்கும் இந்த நிறுவனத்தின் ஒரு வெளி மாநில கிளையில்தான், நித்தியின் பயண ஐட்டினரி வந்து சேர்கிறது. பயண ஏற்பாடுகளுக்கான பணம், வெளிநாட்டு வங்கி ஒன்றின் கிரெடிட் கார்ட்டின் மூலம் செலுத்தப்படுவதும் இதே கிளையில்தான்.
எமக்கு தகவல் கொடுத்த அதிகாரி, மற்றும் நாமாக திரட்டிய சில தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், நித்தி எங்கே செல்ல திட்டமிடுகிறார் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. அவரது கிரேட்-எஸ்கேப் திட்டம் போய் முடியும் இடம், சாங்-மை (Chiang Mai) என்பதுதான், எமக்கு கிடைத்த தகவல்.
பனிப்படிவுகள் உள்ள இமய மலை அடிவாரத்தில் நின்று சிவனை பனிலிங்க தரிசனம் செய்யலாம் என்கிறது இந்து மதம். பனியால் மூடப்பட்ட சிவலிங்க வடிவை மலைச் சிகரத்தில் வழிபடும் முறை அது. இந்திய எல்லைக்கு உள்ளேயே பனிலிங்க தரிசனம் செய்ய முடியும் என்றாலும், தரிசிக்க கூடிய ஏரியா மிகப் பெரியது.
சீனாவுக்கு தெற்கே, இந்திய வடக்கு எல்லைப் பகுதியில் மேற்கே பாகிஸ்தான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது இந்த ஏரியா. இமயமலையின் பனிலிங்க தரிசனப் பகுதி பூட்டான்வரை நீடிக்கிறது. இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து கிழக்கே பூட்டான் வரை செல்லுமுன், இடையே வருகிறது நேபாளம்.
இதுதான், நித்தி சுவாமிகளின் எஸ்கேப்பின் கேட்-வே!
எமக்கு கிடைத்த விபரங்களின்படி, இந்தியாவில் இருந்து நேபாளம் சென்று, தாய்லாந்து செல்வதற்கான பயண ஏற்பாடுகள்தான் நித்தி தரப்பில் இருந்து விசாரிக்கப்பட்டுள்ளன. நாம் குறிப்பிட்ட சாங்-மை, தாய்லாந்தின் வடபகுதி மலை நகரம்.
பனிலிங்க தரிசனம் என்று மதுரையில் இருந்து வடக்கே போகும் சுவாமிகள், எவ்வித சிக்கலுமின்றி இந்திய எல்லைவரை செல்ல முடியும். இந்தியாவின் சுனாவூலி பகுதியில் உள்ள எல்லை ஊடாக நேபாளத்துக்குள் செல்ல முடியும். அங்கிருந்து, தரைப் பாதை வழியாக காத்மண்டு நகரை அடைந்துவிட்டால், மீதிப் பயணத்தை விமானம் மூலம் வைத்துக் கொள்ளலாம்.
காத்மண்டு நகரில் இருந்து பாங்காக் வரை தாய் ஏர்வேஸ் டைரக்ட் ஃபிளைட் உண்டு. பாங்காக்கில் இருந்து சாங்-மை, வெறும் 1 மணி நேர விமானப் பயணம்தான்.
“குறுகிய நோட்டீஸில் எட்டில் இருந்து பத்து பேருக்கு காத்மண்டு-பாங்காக் டிக்கெட் கிடைக்குமா” என நித்தி தரப்பில் விசாரிக்கப்பட்டுள்ளது. பாங்காக்கில் இருந்து சாங்-மை வரை செல்வதற்கு தனியார் சிறிய விமானம் ஒன்றை சாட்டர் பண்ணுவது தொடர்பாகவும் விசாரித்துள்ளார்கள்.
மதுரையில் இருந்து இளைய ஆதீனம் ஏற்கனவே தமது யாத்திரையை இரு நாட்களுக்குமுன் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், ஏற்பாடுகள் முடியாத காரணத்தாலும், மூத்த ஆதீனம் அருணகிரிநாதரை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இளையவர் உள்ளதாலும், புறப்படும் திட்டம் தாமதமாகிச் செல்கிறது.
வரும் வெள்ளிக்கிழமை (27-ம் தேதி) பயணம் நிச்சயம் என தற்போது கூறப்படுகிறது.
அநேகமாக அந்த தேதியில் கிளம்பிவிடுவார். ஏனென்றால், கர்நாடக சி.ஐ.டி-யின் ஆண்மை பரிசோதனைக்கான தேதி நெருங்குகிறது. அந்த தேதிக்கு முன், இமயமலை அடிவாரம் அருகே போய்விட்டால்தான், பரிசோதனைக்கு வராமல் இருப்பதற்கு ஏதாவது சாக்குபோக்கு சொல்ல முடியும்.
கர்நாடக காவல்துறை பெரிய சீன் சிரியேட் பண்ணாமல், பரிசோதனைக்கு மற்றொரு தேதி குறித்துக் கொடுத்து விட்டால்… நோ ரஷ்.
யோசித்து முடிவெடுக்க அவகாசம் கிடைக்கும்.
அவர்கள் அப்படிச் செய்யாமல் அரஸ்ட் வாரண்ட் அது-இதென்று கிளம்பினால், சுனாவூலி பகுதியில் எல்லை பாய்ந்து விட வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக