ஞாயிறு, 15 ஜூலை, 2012

முன்பே இறந்து விட்டாரா சில்வஸ்டர் ஸ்டாலோன் மகன்?

Sylvester Stallone S Son Dead Days Reports
சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகன் சேஜ், பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகன் சேஜ் தனது லாஸ் ஏஞ்சலெஸ் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேஜின் உடல் 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அதற்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் வழக்கமான பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பாமல், தடயவியல் சோதனைக்கு போலீஸார் உடலை அனுப்பியிருப்பதாக கூறுகிறார்கள்.
மேலும் உடலைப் பரிசோதிக்க வந்த டாக்டர்களும் கூட வந்த வேகத்தில் அங்கிருந்து கிளம்பிப் போயுள்ளனர். எனவே உடல் அழுகிய நிலையில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சேஜ், அதிகப்படியாக மருந்துகளை சாப்பிட்டிருக்கலாம் என்றும் ஒரு சந்தேகம் வருகிறது. அவரது உடலுக்கு அருகே மருந்துகள் அதிக அளவில் இருந்துள்ளன. அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
காரணம், அவர் சமீப நாட்களில் சந்தோஷமாகவும், நல்ல மன நிலையிலும்தான் இருந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். எனவே இது நிச்சயம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். உடல் ரீதியாகவும் அவர் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறார்.
சில்வஸ்டர் ஸ்டாலோனின் முதல் மனைவி சாஷா ஜாக்குக்குப் பிறந்தவர்தான் இந்த சேஜ் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக