ஞாயிறு, 15 ஜூலை, 2012

1 லட்சம் செலவில் பிரம்மாண்ட பூமாலை! தல ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜீத்குமார் நடிப்பில் சக்ரி டொலட்டி இயக்கியுள்ள பில்லா-2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸான அஜீத் படத்தை பார்க்க அஜீத்தின் ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர். 

தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் ரசிகர்களின் ஆதரவு அஜீத்திற்கு குறையவில்லை. பல தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பல விதமான பேனர்களும் வைத்திருந்தனர். இதில் விசேஷமாக பெங்களூரைச் சேர்ந்த “பிளாட்டினம் அஜீத் ரசிகர்கள்’ என்ற பெயரில் இயங்கும் ரசிகர்கள் சென்னை ஆல்பட் தியேட்டரில் பிரம்மாண்ட்ட கட்-அவுட் வைத்து, அந்த கட்-அவுட் அளவிற்கு பெரிய மாலையும் அணிவித்திருந்தனர்
அவர்களிடம் கேட்டபோது ”பெங்களூர்ல இது மாதிரி செய்யுறது வழக்கம் தான். பெங்களூர்ல அஜீத் ரசிகர்கள் அதிகம். பில்லா-2 ஷூட்டிங் பெங்களூர்ல நடந்த போது அஜீத் ரசிகர்கள் எப்படியாவது அவர் கூட பேசிடனும்னு ஆர்வத்துல கூட்டம் சேந்துட்டாங்க. அதனால கோவப்பட்டு தல அங்கிருந்து ஷூட்டிங் கேன்ஸல் பண்ணிட்டு கெளம்பிட்டாரு.  
அப்பறம் ஒரு முறை பெங்களூர்ல அவர் கார் சிக்னல்ல இருந்தபோது கூட ரசிகர்கள் அவர பார்க்க முயற்சி பண்ணாங்க. ஆனா அவர் இறங்கல. அவர் மேல உள்ள பாசத்துல காருக்கே பாலாபிஷேகம் செஞ்சிட்டாங்க” என்று கூறினார். தீபாராதனை, தேங்காய் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல் என அமர்க்களமாக இருந்தது பில்லா-2 முதல் காட்சி. 
அந்த பிரம்மாண்ட்ட கட்-அவுட் மற்றும் பூமாலை பெங்களூருவில் இருந்து ரயிலில் வரவழைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 
இனி என்ன நாம சீக்கிரமே வல்லரசாவோம்லே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக