திங்கள், 2 ஜூலை, 2012

Escape சின்னய்யாவும், பெரியம்மாவும் வெளிநாட்டுக்கு பறந்து விட்டார்கள்

பா.ம.க. பதட்டம்: சின்னய்யாவும் பெரியம்மாவும் வெளிநாட்டுக்கு எஸ்கேப்?

Viruvirupu
அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குடும்பத்தினர் சிலர் சீக்கிரம் கைது செய்யப்படலாம்” என்ற பேச்சு சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்தக் கதை கசிந்து பா.ம.க. உயர்மட்டம் வரை எட்டியதால், பா.ம.க.-வில் பதட்டம் நிலவுகிறது.
இதே வழக்கின் விசாரணைக்கு டாக்டர் ராமதாஸ், இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் ஓசைப் படாமல் சென்று பதில் கூறிவிட்டு திரும்பியுள்ளார். அன்புமணி ராமதால் சமீபத்தில் ஒரு தடவை விசாரிக்கப்பட்டார். அதற்குமுன், எழுத்து வடிவில் அவரது ஸ்டேட்மென்ட் பெறப்பட்டதாக தெரிகிறது.
இதில் தொடர்புடைய மற்றொருவர் எனக் கூறப்படும் சரஸ்வதி அம்மாள் (டாக்டர் ராமதாஸின் மனைவி) இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில்தான், சி.பி.ஐ. சற்றே வேகம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.
டில்லியில் இருந்து(காங்கிரஸ் கிருஷ்ணசாமியின் மகள் தான் அன்புமணியின் மனைவி ) தைலாபுரத்துக்கு ‘அபாய எச்சரிக்கை’
கிடைத்ததையடுத்து டாக்டர் ராமதாஸ், தமது மனைவி மற்றும் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரியவருகிறது. கடந்த வாரமே அவர்கள் வெளிநாடு கிளம்பிச் சென்று விட்டதாக கூறுகிறார்கள். கட்சி மட்டத்தில் இருந்து அன்புமணியை தேடிச் செல்பவர்களுக்கு, அவர் டில்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், பா.ம.க. மேல்மட்ட விஷயம் அறிந்தவர்கள், என்றே கிசுகிசுக்கிறார்கள். escape
அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில், மனைவி மற்றும் மகனை கேஸில் இருந்து விடுவித்தால் தாம் பூரண ஒத்துழைப்பு கொடுப்பதாக டாக்டர் ராமதாஸ் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கூறியதாக ஒரு தகவல் உள்ளது. சி.பி.ஐ. சென்னை அலுவலகமும், இதே டீலை டில்லிக்கு ரெக்கமன்ட் செய்திருப்பதாக மத்திய உளவு வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
சி.பி.ஐ. சென்னை அலுவலகத்தில், டாக்டர் ராமதாசின் சம்மந்தி (அன்புமணியின் மாமனார்) குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயர் பதவியில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக