கொடைக்கானலில் நித்தியானந்தா... ஹோட்டலை விட்டு வெளியேற போலீஸ் திடீர் தடை!
கொடைக்கானல்: நித்தியானந்தா தனது ஆதரவாளர்கள் புடை சூழ கொடைக்கானலுக்கு வந்து ஒரு ஹோட்டலில் 60 அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் ஹோட்டலை விட்டு அனுமதி பெறாமல் வெளியேறக் கூடாது என்று போலீஸார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. அங்கு யாரும் இல்லை. நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தமிழகத்திற்குள் புகுந்துள்ளனர். ஆங்காங்கு தங்கியுள்ளனர். நித்தியானந்தாவுடன் ஏராளமானோர், மதுரை ஆதீன மடத்தி்ல தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் கொடைக்கானலுக்கு கிளம்பி வந்துள்ளார் நித்தியானந்தா. அத்தனை பேரும் நள்ளிரவுக்கு மேல் மலை ஏறி வந்தனர். பின்னர் அட்டுவம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவ்வளவு பேரும் ரூம் எடுத்துத் தங்கினர். மொத்தம் 60 அறைகளை அவர்கள் புக் செய்துள்ளனராம். ஜூலை 22ம் தேதி வரை இங்குதான் அத்தனை பேரும் முகாமிடப் போகிறார்களாம்.
எதற்காக இந்த திடீர் தங்கல் என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ யோகா முகாம் என்று கூறப்டுகிறது.
இந்த ஹோட்டலுக்குள் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் மற்றும் ஹோட்டலில் தங்கியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஹோட்டல் வாட்ச்மேன் தவிர நித்தியானந்தாவின் கட்டுமஸ்தான சில ஆதரவாளர்களும் வாசலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும் கூட்டமாக நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் கொடைக்கானல் வந்திருப்பதால், போலீஸ் அனுமதி இல்லாமல் யாரும் வெளியே போகக் கூடாது என்று நித்தியானந்தா தரப்புக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளதாம்.
கொடைக்கானலில் அறைகளில் போட்டு தங்கியிருக்கும் காவி நித்தியானநதா ஹோட்டலில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக