வாஸ்து என்பது இன்றைக்கு பெரும்பாலோனோர் பேசக்கூடிய
விசயமாகிவிட்டது. வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றாலே வாஸ்து சரியா இருக்கா
பாத்தீங்களா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இந்தியாவில் கூறப்படும்
வாஸ்து சாஸ்திரத்திற்கும், சைனாவின் பெங்சூயி சாஸ்திரத்திற்கும்
தொடர்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருக்க கூடாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.
மகாபாரத படங்கள்சிலரது மகாபாரத போர்க்களத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜூனன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்திருப்பார்கள். இது போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியை குறிக்கும் படங்களை வீட்டில் வைத்திருக்க கூடாதாம். இது குடும்ப ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் நன்மை தரக்கூடியது அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.
தாஜ்மகால்
காதலின் பெருமையை உணர்த்துவதற்காக தன் மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய கல்லறைதான் தாஜ்மகால். இது இறப்பின் சோகத்தை வெளிப்படுத்தக்கூடியது. எனவே இதுபோன்ற படங்களையோ, உருவங்களையோ வீட்டில் வைத்திருக்க கூடாது . இதனால் வீட்டின் நிம்மதி குலைந்து போகும்.
நடராஜரின் நடனம் உலக இயக்கத்திற்காகத்தான் என்று கூறுவார்கள். அனைத்து நடனக்கலைஞர்களின் வீடுகளிலும் நடராஜரின் உருவம் உள்ள சிலையோ, படமோ இருக்கும். ஆனால் ‘தாண்டவ நிருத்ய' எனப்படும் நடனம் ஊழிக்காலத்தை அதாவது அழிவினை உணர்த்தக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஒரு காலை தூக்கி நடனமாடியபடி இருக்கும் நடராஜர் உருவத்தை வீட்டிற்கு வைப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.
மூழ்கும் கப்பல்
ஒரு சிலரது வீடுகளில் தண்ணீரில் கப்பல் மூழ்கியபடி இருக்கும் படங்களை வீட்டில் மாட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது குடும்ப உறவுகளின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து விடுமாம். எனவே இதுபோன்ற படங்கள் இருந்தால் உடனடியாக அதனை வெளியேற்றுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
நீர் வீழ்ச்சி
வீட்டிற்குள் அழகிற்காக நீர்வீழ்ச்சி போல் செட் செய்திருப்பார்கள். அல்லது அதுபோன்ற இயற்கை காட்சிகள் நிரம்பிய சுவர்படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது வீட்டில் உள்ள செல்வம், வருமானத்தை வழிந்தோடச் செய்து விடுமாம். எனவே இதுபோன்ற படங்களை அழகிற்காக வைத்திருக்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.
வன விலங்குகள்
சிங்கம், புலி, போன்ற வன்முறை நிரம்பிய காட்டு விலங்குகளின் படங்களை ஒரு சிலர் வீடுகளில் மாட்டி வைத்திருப்பார்கள். இது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். அந்த மிருகங்களின் குணங்கள் வீட்டில் உள்ள நம் குழந்தைகளுக்கு தொற்றிக்கொள்ளும் என்கின்றனர். எனவே வன விலங்குகளின் படங்களை கண்டிப்பாக மாட்டி வைக்கக் கூடாதாம்.
நம் வீட்டில் எப்பொழுதுமே எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை வைத்திருக்கக் கூடாது. நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களையோ, படங்களையோதான் மாட்டி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் குடும்பமானது ஒற்றுமையோடு மகிழ்ச்சிகரமாக அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.
வீடுகளில் வைத்திருக்க கூடாத பொருட்கள் படங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக