திங்கள், 2 ஜூலை, 2012

31 அமெரிக்க விமானப்படை பெண் வீராங்கனைகளை சீரழித்த பயிற்சியாளர்கள்!

டெக்சாஸ்: அமெரிக்க விமானப்படையில் 31 பெண் வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானப்படையில் அதிலும் குறிப்பாக டெக்சாஸ் சான் ஆண்டனியோவில் உள்ள லாக்லேண்ட் விமானப் படைத்தளத்தில் பயிற்சி பெறும் 31 பெண் வீராங்கனைகள் அவர்களது பயிற்சியாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
12 ஆண் பயிற்சியாளர்களில் 6 பேர் மீது கற்பழிப்பு, ஒழுங்கீனம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள 12 பயிற்சியாளர்களில் 9 பேர் 331வது பயிற்சி ஸ்குவாட்ரனைச் சேர்ந்தவர்கள். இந்த ஸ்குவாட்ரனில் தான் பெண் வீராங்கனைகள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று உயர் அதிகாரி எட்வர்ட் ரைஸ் தெரிவித்துள்ளார். மேலும் யாராவது இதுபோன்ற கொடுமைக்கு ஆளாகியுள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஸ்குவாட்ரனின் தலைவர் கடந்த வாரம் தான் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. இனிமேல் பெண் வீராங்கனைகளுக்கு பெண் பயிற்சியாளர்களை வைத்தே பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்க விமானப்படையில் வெறும் 11 சதவீத பெண்களே பயிற்சியாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக