செவ்வாய், 24 ஜூலை, 2012

குடிகாரன் கொலை தாய் மனைவி கைது

தருமபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த தேவர் முக்குளத்தை சேர்ந்தவர் முருகன். (வயது-35). இவர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி முருகன் வீட்டுக்கு அருகில் உள்ள புளிய மரத்தில் மர்மமான முறையில் முருகன் தூக்கு போட்டு இறந்து கிடந்தார்.
குடிக்க பணம் தர மறுத்ததால், மனமுடைந்த முருகன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கொடுக்கப்பட்டது, காவேரிப்பட்டணம் போலீஸார் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சம்பவத்தன்று, இறந்து போன முருகன் குடித்து விட்டு வீட்டில் இருந்த தாய் நீலவேணி மற்றும் மனைவி வேடியம்மாளிடம் தகராறு செய்ததுடன் அவர்களை அடித்து உதைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாய் நீலவேணி மற்றும் மனைவி வேடியம்மால் ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கினர். இதில், அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் வீட்டுக்குள் இறந்து கிடந்த முருகனை தூக்கிக்கொண்டு வந்து, அருகில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்துது.
இந்த கொலை வழக்கு சம்மந்தமாக, காவேரிப்பட்டணம் போலீஸார் இறந்து போன முருகனின் தாய் நீலவேணி மற்றும் மனைவி வேடியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக