புதன், 11 ஜூலை, 2012

நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்; ஆபாச வீடியோவால் அதிர்ச்சி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதமிழ் நடிகர் மஹத்துக்கு அடி, உதை ஏன்? நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்; ஆபாச வீடியோவால் அதிர்ச்சி

சென்னை :நட்சத்திர விருந்தில் தமிழ் நடிகர் மஹத்துக்கு அடி, உதை விழுந்த விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலிப்பதாக சொல்லி, நடிகையை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்து டார்ச்சர் செய்ததாக, மஹத் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. தெலுங்கு பட ஹீரோ மனோஜ் மன்சு. பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தமிழில் மங்காத்தாவில் நடித்தவர் மஹத். கடந்த சனிக்கிழமை சென்னையில் ஒரு பார்மசூட்டிகல் உரிமையாளர் அளித்த நட்சத்திர விருந்து நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவருமே நடிகை டாப்ஸியை காதலித்திருக்கிறார்கள். மன்சுவுடன் பிரிவு ஏற்பட்ட சமயத்தில் மஹத், காதல் வளர்த்திருக்கிறார். இதுதொடர்பாக நட்சத்திர விருந்தில் மனோஜ் , மஹத் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மஹத்தை, மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து, உதைத்தனர். இதில் காயம் அடைந்த மஹத், ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் மனோஜ் தாக்கியது பற்றி மஹத் கூறியதாவது: பார்ட்டியில் பங்கேற்ற நான், கூட்டத்தில் இருந்து விலகி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது மனோஜ் மற்றும் அவரது 3 நண்பர்கள், எங்கள் அருகில் வந்து வம்பு செய்தனர். திடீரென அவர்கள் என்னை காரணம் இல்லாமல் தாக்கினார்கள். முகம், வயிறு மற்றும் வயிற்றுக்கு கீழ் பகுதியில் தொடர்ந்து தாக்கினர்.

அதிகாலை 4 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. தாக்குதலில் எனது கண் வீங்கிவிட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன். இவ்வாறு மஹத் கூறின£ர். மனோஜின் நண்பர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரித்தபோது, ‘காதலிப்பதும் பெண்களை கழற்றிவிடுவதும் மஹத்துக்கு சகஜம். அவருக்கு நாகரிகமாக பழகத் தெரியாது. நடிகை டாப்ஸியுடன் பழகினார். காதலிப்பதாக சொல்லி, நெருக்கமாக இருந்தார். தனிமையில் இருந்தபோது அந்தரங்க காட்சிகளை வீடியோ எடுத்து டார்ச்சர் கொடுத்திருக்கிறார். அவருடைய வக்கிர பிடியில் சிக்கி நிறைய பெண்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டாப்ஸிக்கு அவர் கொடுத்த டார்ச்சரை வெளியில் சொல்ல முடியாது. அதனால்தான் அவரை தட்டிக் கேட்க வேண்டியதாயிற்று’ என்றார்கள். மஹத் புகார் குறித்து மனோஜிடம் கேட்டதற்கு, ‘ஏதோ நடந்து விட்டது. நானும் மஹத்தும் நீண்ட நாள் நண்பர்கள். சமீபத்தில் எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. அதை பேசி தீர்த்துக் கொண்டோம். என்னை பற்றி மஹத் வதந்தி பரப்புவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி நேற்று இருவரும் பேசி சமரசம் ஆகி விட்டோம். இப்படியொரு சம்பவம் நடந்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். இனிமேல் இருவரும் நட்பாக இருப்போம். இனி எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாதுÕ என்றார். தமிழக மற்றும் ஆந்திர சினிமா வட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக புயல் கிளப்பிய டாப்ஸி விவகாரத்தில், திடீர் சமரசம் ஏற்பட்டதன் பின்னணியில் பல்வேறு ‘முக்கிய’ தகவல்கள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக