புதுடெல்லி, ஜூலை 3-ஆசிட் விற்பனையை கட்
டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த மைனர் பெண் மீது ஆசிட்
வீசப்பட்டதில் அவரது முகம், கைகள் சிதைந்தது. காதலிக்க மறுத்ததால் இளை
ஞர்கள் 3 பேர் சேர்ந்து ஆசிட் வீசினர். அவருக்கு நிவாரணம் வழங்கக்
கோரியும், ஆசிட் வீசிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசா ரித்து
வருகிறது. இதை விசாரித்த நீதிபதிகள், பெண்கள் மீது வீசப் படுவதால் ஆசிட்
விற் பனையை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங் களுக்கு கடந்த
பிப்ர வரியில் உத்தரவிட் டனர். ஆசிட் விற்ப னையை கட்டுப் படுத் துவது
தொடர்பாக மாநிலங்களுடன் ஒருங்கி ணைந்து செயல் பட மத் திய அரசுக்கு ஏப்ரலில்
நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா,
ஏ.ஆர். தவே ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
ஆசிட் விற் பனையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து பதில்
மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக ளுக்கு நீதிபதிகள் உத் தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக