செவ்வாய், 31 ஜூலை, 2012

வைகோ உண்ணாவிரதத்தில் தி.மு.க., வினர் பங்கேற்பு

திருநெல்வேலி: நாங்குநேரியில் வைகோ தலைமையில் நடந்த உண்ணாவிரதத்தில் தி.மு.க.,வினரும் திரளாக பங்கேற்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளம் குத்தகைக்கு விடப்பட்டு மண் எடுக்கப்படுகிறது. இதில் உள்ளூர்காரர்களும் மண் அள்ளுவதால் மோதல் ஏற்பட்டது. குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டனர். இதுகுறித்த விசாரணைக்கு சென்ற இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வானமாமலை என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
இதைக் கண்டித்து, நாங்குநேரியில் உண்ணாவிரதம் நடந்தது. ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் சரவணன், பெருமாள், நிஜாம், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மதுஅலி, இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சண்முகவேல், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி பங்கேற்றனர். வைகோ தலைமையில் நடந்த போதும், தி.மு.க., முன்னாள் துணைமேயர் விஸ்வநாதன், முன்னாள் மண்டல தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க., வினரும் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக