திங்கள், 30 ஜூலை, 2012

சென்னையில் பவனி வந்த பழைய கார்கள்




 சென்னை நகரில் பவனி வந்த 1920 முதல் 1975 வரையிலான ஆண்டுகளில் தயாரான பழைய கார்களை இன்றைய தலை முறையினர் ஆர்வமாக கண்டு ரசித்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பழைய கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் பழைய கார்களின் பவனி, கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் 1920ஆம் ஆண்டு முதல் 1975 ஆண்டு வரை தயாரான 80 கார்களும் 22 மோட்டார் சைக்கிள் களும் இடம் பெற்றிருந்தன. பீகார், மத்தியப்பிர தேசம், உத்தர பிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கார்கள் பங்கேற்றன.
சென்னை எழும்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் இருந்து சீரான வேகத்துடன் பாய்ந்து சென்ற பழைய கார்களை சாலைகளில் சென்ற வர்கள் ரசித்துப் பார்த்து கைத்தட்டி உற்சாக வரவேற்பளித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக