புதன், 25 ஜூலை, 2012

மும்பை தாக்குதல் நடந்த போது 60 மணி நேரம் தொடர்ச்சியாக விழித்திருந்தேன்: அபு ஜிண்டால்


 I Did Not Sleep 60 Hours During 26 11 Attacks Abujundal
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது சுமார் 60 மணி நேரம் தொடர்ச்சியாக விழித்திருந்து கண்ட்ரோல் ரூமில் இருந்து கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தேன் என்று அபுஜிண்டால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.
சவூதி அரேபியாவில் பதுங்கியிருந்த அபுஜிண்டால் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர் .பின்னர் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீசிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். மும்பை தாக்குதல் பற்றிய முழுவிவரங்களையும் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீசாரிடம் ஒப்புவித்திருக்கிறான் அபுஜிண்டால்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் உயர் அதிகாரி கெளசிக் கூறியதாவது:
2005-ம் ஆண்டு முதல் அபு ஜிண்டால் பயங்கரவாத பயிற்சிகளைப் பெறத் தொடங்கியிருக்கிறான். அஸ்லாம் காஷ்மீரி என்ற தீவிரவாதி மூலம் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் ஜிண்டால் தொடர்பில் இருந்து வந்திருக்கிறான். அஸ்லாம் காஷ்மீரியை ஜிண்டாலுக்கு அறிமுகப்படுத்தியது அவுரங்கபாத் ஆயுத குவியல் வழக்கில் தொடர்புடைய அமீர் சேக் என்பவன்.
2005-ம் ஆண்டு நேபாளம் சென்ற ஜிண்டால் அங்கு லஷ்கர் இ தொய்பா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று அங்கு பயங்கரவாதிகள் முகாமில் இணைந்து கொண்டான். அனால் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹசீப்பை எளிதாக அணுகவும் முடிந்திருக்கிறது. அவனுக்கு இரண்டு முறை பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மும்பை தாக்குதலை முழுமையாக வழிநடத்தியது தாம்தான் என்று ஜிண்டால் கூறியிருக்கிறான். மேலும் தாக்குதல் நடந்த 60 மணி நேரமும் உறங்காமல் விழித்திருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறான். மேலும் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு ஹிந்து கற்றுக் கொடுத்ததுதம் தாம்தான் என்று ஜிண்டால் ஒப்புக் கொண்டிருக்கிறான்.
இதேபோல் மஹாராஷ்டிராவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள தீவிரவாதி ஜூல்பிகார் பையாஸின் மறைவிடம் பற்றியும் ஜிண்டால் கூறியிருக்கிறான் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக