சனி, 23 ஜூன், 2012

Singrur டாடா நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு

டாடாவுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கும் சட்டம் செல்லாது: கொல்கத்தா நீதிமன்றம்! மமதாவுக்கு பெரும் பின்னடைவாக

கொல்கத்தா: டாடா நிறுவனத்துக்காக சிங்கூரில் முந்தைய இடதுசாரி அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்கும் வகையில் மமதா பானர்ஜி அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கூரில் டாடாவுக்காக விவசாயிகளின் 997 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகளுடன் இணைந்து மமதா போராட்டம் நடத்தினார். இதனால் தமது தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றியது டாடா நிறுவனம். தேர்தல் வாக்குறுதிகளிலும் முதன்மையாக ஒன்றாக சிங்கூரில் 400 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைப்போம் என்று கூறியதுடன் அதற்கான சட்டத்தையும் மமதா இயற்றினார். ஆனால் மமதா அரசின் சட்டத்தை எதிர்த்து டாடா நிறுவனம் நீதிமன்றத்துக்குப் போனது. அப்பொழுது நீதிபதி ஐ.பி. முகர்ஜி, மமதா அரசின் சட்டம் அரசியல் சாசனத்துக்குட்பட்டது- செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தார்.

இதை எதிர்த்து டாடா நிறுவனம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பின்காய் சந்திர கோஷ் மற்றும் மிர்னால் கந்தி செளத்ரி ஆகியோர் மாதா அரசின் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தனர். இது மமதாவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

டாடா நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு வெளியான சிலநிமிடங்களில் பங்குச் சந்தையில் டாடாவின் மதிப்புகள் அதிகரிக்கவும் செய்தன.

ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் மம்தாவுக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து இது அவருக்குக் கிடைத்துள்ள அடுத்த தோல்வியாகும்.செல்லாது என்று தீர்ப்பளித்தனர். இது மமதாவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

டாடா நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு வெளியான சிலநிமிடங்களில் பங்குச் சந்தையில் டாடாவின் மதிப்புகள் அதிகரிக்கவும் செய்தன.

ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் மம்தாவுக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து இது அவருக்குக் கிடைத்துள்ள அடுத்த தோல்வியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக